என்னவள் மண்ணின் நிலவு
நித்தம் நித்தன் உன்னைக் காணும்போதெல்லாம்
புத்தம் புது முழுநிலவாய்த் தோற்றம் தருகிறாய்
நித்தம் வானில் பவனி வரும்
நிலவோ நித்தம் புதியதாய்க் காட்சி
தருவதில்லை தக்கனின் சாபத்தால்
வளர்ந்தும் தேய்ந்தும் வளர்ந்துமாய்க்
காலம் தள்ளும் நிலவு என்னவளே
நீயோ என்கண்முன் என்றும் தேயா
மண்ணின் நிலவாய் எழிலாய் எனக்கு
காட்சி தருகின்றாய் இப்படி