அவள் ஒப்பற்றவள்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

இவளை
சிலை என்று
சொல்லலாம் என்றால்....
சிலை
அங்குமிங்கும் நடக்காதே !

மலர் என்று
சொல்லலாம் என்றால் ....
மலர்
மாலையில்
உதிர்ந்து விடுமே!

வானவில் என்று
சொல்லலாம் என்றால்
வானவில்
சிறிது நேரத்தில்
மறைந்து விடுமே....!

சித்திரம் என்று
சொல்லலாம் என்றால் ....
சித்திரம் சுவற்றில்
மாட்டிதானே இருக்கும் !

மயில் என்று
சொல்லலாம் என்றால்....
மயில் மரத்தில் தானே வாழும் !

நிலவென்று
சொல்லலாம் என்றால் ....
நிலவு
இரவில் மட்டும் தானே
தெரியும் !

தென்றல் என்று
சொல்லலாம் என்றால்....
தென்றல்
சேலைக் கட்டியது
இல்லையே..!

இவளோடு ஒப்பிட ஒன்றுமில்லை....
இவளோ
ஒப்பற்றவள்.....!!!

*கவிதை ரசிகன*குமரேசன்*

💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-May-22, 9:45 pm)
பார்வை : 164

மேலே