என் சாபமா

என் தேவியே பிரிந்தது ஏனோ?
வாடிப் போன பயிர் நானோ?
ஏனோ....ஏனோ...
அது சோகம் தானோ?
என் தேவனே இது உன் கோபமா?
என் வாழ்விலே அது என் சாபமா?

நீ சொல்லிப்போனது முள்ளாய் ஆனதே..
நான் கொண்டு வந்தது மண்ணாய் போனதே..
என்னை விட்டு பைங்கிளி பறந்ததெங்கே?
தொலைத்தவன் தேடுகின்றேன். பூமுகம் எங்கே?
எந்தன் வாழ்விலே எங்கும் சோகமே
என்ன செய்வேன் நானே?
வந்து போ என் மானே.

கண்ணுக்குள் நிறைந்தது கண்ணீர் ஆனதே..
நெஞ்சுக்குள் இருந்தது தீயாய் எரிந்ததே...
உன்னைவிட்டு நானிங்கு வாழ்வதெங்கே?
என்னை விட்டு தொலைவில் நீ போனதெங்கே?
அன்பு சொன்ன என் மானே ...தேனே...
நொந்து போனேன் நானே...
கொண்டு போ என் மானே.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-May-22, 8:47 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 1317

மேலே