உன்னில் எழும் மாற்றங்கள்

உன்னில் எழும் மாற்றங்கள் - என்னில் தாக்கங்கள்
---
வங்கக்கடல் நடுவினிலே புயல் மையம் கொள்ளும்,
உள்நாட்டில் கூடக் காற்று ஓங்கி வீசும் !

தூரத்து மலைமுகட்டில்- மழைக் கொட்டித் தீர்க்கும்
ஊருக்குள் பெருவெள்ளம் அடித்துப் போகும் !

தென்பொதிகை வெண்பனியால் தன்னை மூடும் ,
தென்றல் குளிர் இதமாக இங்கும் வீசும் !

தூரத்தில் உன்னில் எழும் மாற்றம் எல்லாம்
விளைவுகளாய் என் நெஞ்சில் தாக்கம் கொள்ளும் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (27-May-22, 10:02 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே