வசந்த வாசலில் வானத்து தேவதைபோல்

கவிதை எழுத நினைப்பவனுக்கு
கற்பனை வானை திறக்கிறாய்
காதல் புரிய நினைப்பவனுக்கு
கண்ணால் ஆரம்பக்கல்வி புகட்டுகிறாய்
வீசும் தென்றலுடன் மௌனமொழி பேசி
காற்றில் முத்தம் தருகிறாய்
வசந்த வாசலில் வானத்து தேவதைபோல் நின்று சிரிக்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-22, 6:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே