கனவின் சுவடுகள் கலையா நினைவுகளுடன்
![](https://eluthu.com/images/loading.gif)
கனவின் கதவைத் திறந்து
சிறகு இல்லா
ஒருதேவதை போல்
கண்முன் தோன்றுகிறாய்
நிலவில் நனையும் இரவில்
கைகோர்த்து அழைத்துச் சென்று
காதல் கீதம் பாடுகிறாய்
கனவின் சுவடுகள் கலையா
நினைவுகளுடன்
மாலைதோறும் உனக்காகக்
காத்திருக்கிறேன் !!!