கண் சாடை
நேரிசை வெண்பா
பிரியும்தன் காதலர்கு வீண்வார்த்தை நீக்கி
சரிசாடை காதலிகண் காட்டும் -- சரிந்துவீழ்
கைவளைத் தோளுடன் பாதப் பசலையாம்
நோய்க்குறி நோக்கினாள் சொல்
தன்னைப் பிரியும் காதலர்க்கு காதலி பிறரறியா வண்ணம் உமது பிரிவால்
எனது கைகளை கழலும் என்று கையையும் தோள் மெலிந்து சரியும் என்று
தோளையும் பாதம் பசலை நோய் வந்து வெளுக்கும் என்று பாதத்தையும்
கண்ணால் நோக்கி அவனுக்கு சாடையாய் உணர்த்திக்காட்டினாளாம்.
காமத்துப்பால். குறள். 9 / 20 வது பாடல்
......