காதல் குறிப்பு

நேரிசை வெண்பா

நேற்றுதான் காதலரு மென்னைப் பிரிந்தது
மாற்றார் அறியுவண்ணம் சாற்றியது -- தேற்றமென
மாற்றி யதுடலேழு நாள்முன் பசலைத்தோள்
ஆற்ற அதிசயம் பாரு

மாற்றார் = பிறர்
சாற்றியது = வெளிக் காட்டியது
தேற்றம் °° தெளிவாக
ஆற்ற. = சொல்லுதல்

நேற்று தான் என்காதலர் என்னைப் பிரிந்தார். ஆனால் எனது தோளும்
உடலும் ஏழு நாட்களுக்கு முன்னமே அவர் பிரிவை அறிந்து வாடத்
தொடங்கி பசலை நோயால் வாடியது எப்படி என்று அதிசயமாக
இருக்கிறது.


காமத்துப்பால் குறள். 8 / 20 வது பாடல்


.........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jun-22, 9:01 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal kurippu
பார்வை : 45

மேலே