நீ என் மன ஏணியில் உயரமடி

அவள் விழிகள் கூர் ஈட்டி
அதன் வீச்சில் எல்லாம் சிக்கிக்கொள்ளும்!


புன்னகை சிந்தும் இதழ் மொழி இன்ப ஊற்று!

கண்ணசைவில் கலங்கடிக்கும் கயல்விழி கன்னி!

மெய்மயக்கம் செய்யும் மாய மோகினி
என் காதல் காமினி!

உன் கண்ணில் விழும் தூசு கூட அது என் துயரம்
நீ என் மன ஏணியில் உயரமடி!

எழுதியவர் : Kaleeswaran (3-Jun-22, 7:16 pm)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 65

மேலே