காதல் மறதி
நேரிசை வெண்பா
தொல்லையவர் தந்ததை சொல்லியூடத் தோழிநான்
செல்லெ னவரருகில் சென்றநானும் -- மல்கிப்பின்
சொல்லி மகிழ்ந்தவரைக் கூடினேன் தோழியே
சில்லை நிலையென்சொல் வேன்
செல்லென. = இடியென்று
மல்கி. = மயங்கி
சொல்லி. = புகழ்ந்து பாடும்
சில்லை. = சிறுமை
தோழி! காதலரைக் காண்பதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்;
ஆனால் அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவரைப் புகழ்ந்து கூடவே என் மனம் சென்றது.
என் மறதியை என்ன வென்று சொல்வேன் தோழி
காமத்துப்பால். குறள் 4 / 21 வது பாடல்
....