காதலரைக்காண எல்லாமே மறந்தது

நேரிசை வெண்பா

அஞ்சனந் தீட்டும் சமயம் கிடைக்காவாம்
அஞ்சிறை கோலும் மறைதல்போல் -- வெஞ்சினம்
எஞ்சி மறந்தது கேளாத வர்குற்றம்
விஞ்சியதென் காதலா லின்று


அஞ்சிறை == மைத்தீட்டும் உள்இறகு
வெஞ்சினம் == கடுங்கோபம்
எஞ்சி. = குறைந்தது
விஞ்சியதென் காதலால். == மிகுதியான காதலால்

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன். (


காமத்துப்பால். குறள். 5/21. வதுப்பாடல்

........

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jun-22, 7:00 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே