விழியசைத்து எழுப்பும் வினாதான் என்னவோ
கார்க்கூந்தல் கலைந்தாடும் மாலையில்
காதலின் ராகம் மௌனத்தில்
இதழோரம்
நேர்கொண்ட பார்வையில்
விழியசைத்து நீதான் எழுப்பும்
வினாதான் என்னவோ
சோர்வே இல்லா சுடர்விழியால்
தொடரம்பு தொடுத்து காதலில்
வெல்கிறாய்
போர்புரிய ஆற்றல் இல்லை
சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம்