காதலர் வராத குற்றம்

நேரிசை வெண்பா


வந்தால் குறைகள் அறியேன் வராராயின்
எந்தன் மனம்முழுக்க எத்தனை -- விந்தை
யவர்செய்த குற்றம் அடுக்கடுக் காக
தவறெனக்காண் பேன்யானும் பார்


காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக்
காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக்
காண்பதில்லை.


காமத்துப்பால். குறள். 6 / 21


....

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jun-22, 8:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே