உங்களுக்காக ஒரு கடிதம் 23

ஹாய்....
எங்களின் கோபம் இப்போ நேற்று வந்ததில்லை. நாங்கள் பிறந்ததிலிருந்தே தொடர்கின்ற ஒன்று.என்னவென்று சொல்வது? அப்பா அம்மா ரெண்டுபேரும் வேலைக்குப் போய்விடுகிறீர்கள். வளர்வது எல்லாம் வேலைக்காரர்களுடன். எப்படி எங்களுக்கு பெற்றவர்களின் அன்பு கிடைக்கும்? வீட்டில் இருக்கும்போது..குடும்ப பிரச்சனைகளை சத்தம்போட்டு விவாதிக்கிறீர்கள்.அப்படி விவாதிக்கும் போது தெரிந்தோ தெரியாமலையோ குடும்ப ரகசியங்கள் எங்களின் காதுகளிலும் விழுகிறது. அம்மா அப்பாவின் குடும்பத்தை தாழ்த்திப் பேசுவதும், முக்கியமாக அத்தையைப் பற்றியும், பாட்டியைப் பற்றியும் .... இல்லாததும் பொல்லாததும் சொல்லும்போது எங்களுக்கு அப்பாவின் குடும்பத்தின் மேல் எப்படி பாசமோ...மரியாதையோ வரும் சொல்லுங்கள்? அதேபோல் அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிப்பதும், அம்மாவின் குடும்பத்தை அசிங்க அசிங்கமாக பேசும்போது எங்கள் கோபத் தீக்கு பெட்ரோல் ஊற்றியதைப்போல் கொழுந்துவிட்டு எரிகிறது.
ஸ்கூலுக்கு போக தொடங்கும்போதே...அதாவது LKG, UKG தொடங்கியதிலிருந்தே எங்கள் கோபம் முளைவிட ஆரம்பித்து விட்டது. ஸ்கூல்...ஸ்கூல்விட்டா உடனே டியூசன் என்றும் ...+2 முடிக்கும் வரை...தூங்கும்வரை படிப்பு...தூங்கி விழித்தவுடன் படிப்பு... ஸ்கூல்லகூட... மாரல் கிளாஸ்(MORAL கிளாஸ்), PT க்ளாஸ், CRAFT பீரியட், ஓவிய பீரியட்...என்று உங்க காலத்தில் இருந்த ஒரு க்ளாஸ் கூட இப்போது புழக்கத்தில் இல்லை...விளையாட பரந்து விரிந்த விளையாட்டு மைதானம் கூட எங்கள் பள்ளிகளில் இல்லை. இது கசப்பான உண்மை. மார்க்...மார்க்...மார்க்குமட்டும்தான். டாக்டர்....எஞ்சினீர்... என்று எங்களுக்கு விருப்பமில்லாமல், எங்களை கட்டாயப்படுத்தி...எல்லாவற்றையும் எங்கள் மேல் துருத்தி...எங்களை மூளை சலவை செய்து அதல பாதாளத்தில் தள்ளிவிட்ட உங்களைப் பார்த்து எங்கள் கோபம் அதிகரிக்கிறது.
சரி, ஸ்கூல் முடித்து மேல் படிப்புக்கு போக எத்தனையெத்தனை போராட்டங்கள்...எத்தனை சவால்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. NEET போன்ற பரீட்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. படிப்பது ஒருபுறம் இருக்க, அதற்கான செலவுகள்....எங்கள் இயலாமையை கண்டு எள்ளிநகைக்கும் இந்த சமுதாய ஏற்ற தாழ்வுகளை கண்டு எங்களுக்கு சிரிப்பா வரும்? மனத்தைத் தொட்டு சொல்லுங்கள்.இதன் இடையில் சமுதாயத்தின் ஏற்றது தாழ்வுகள், ஜாதி, சமயம் என்கின்ற மற்ற அரக்கர்களின் பிடியிலிருந்து நாங்கள் எப்படி மீள்வது? இளரத்தம் கொதிக்காதா? சமுதாயத்தின் மீது எங்கள் கோபம் இன்னும் அதிகமாகத்தான் செய்கிறதே தவிர...வேறெப்படி சொல்வதென்று தெரியவில்லை.
இதற்கு மகுடம் வைத்ததுபோல் இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் " கொரோனா".எங்கள் சுறுசுறுப்பையே முடக்கி, உத்வேகத்தையே சிறைவைத்து வீட்டிற்குள்ளெயே முடக்கி முடமாக்கிப் போட்டுவிட்டதே..அந்த நான்குச் சுவர் திகார் ஜெயிலில் நாங்க பட்ட அவஸ்தைகள்...மனஉளைச்சல்கள்...சொல்லில் அடங்காதது. செல்லைத் தொடாதே..செல்லைத் தொடாதே என்று டார்ச்சர் செய்து..பின் ஆன்லைன் க்ளாஸ் என்று எங்கள் கைகளில் செல்லைத் திணித்து வேடிக்கைப் பார்த்த இந்த சமுதாயம், இந்த கல்வி அமைப்பு முறையின் ஏற்ற இறக்கங்கள்...வெளிப்படையற்ற செயல்பாடுகள் எங்களின் கோபத்தை மேலும்மேலும் எரியவிடுகிறதே அன்றி வேறென்ன செய்கிறது? இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

தொடரும்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Jun-22, 6:57 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 47

மேலே