நீ சொல்லும் பாதையில்
எலே முருகேசா எங்காலலே போறாய்... நீ போக வேண்டிய வழி இங்காலப் பக்கம் இருக்குலே... எங்கால போக சொன்னா நீ எங்கால போறாய்...போரத்துக்கு வழிய கேட்டான்...சொன்ன வழியால போகாம எங்கால போறான் இவன்... இப்ப இருக்குற பிள்ளைங்க எங்கே நம்ம சொல்லு பேச்சு கேக்குதுங்க. அதுக பாட்டுக்கு முடிவெடுத்து ஏதோ ஒரு பக்கம் போய் முட்டிட்டு திரும்ப வருதுங்க.... என்று புலம்பியவாறு தனது மகளின் வீட்டை நோக்கி நடந்து சென்றாள் ரமணிப் பாட்டி... அந்த சிறு கிராமத்தின் மூதாட்டியவள்.
இத்தனை வயதாகியும் கூட சற்றுமே தளராது திடமான உடலோடு இருக்கும் ரமணி பாட்டிற்கு நான்கு மகள்களும் நான்கு மகன்களும் என எட்டு பிள்ளைகள் உண்டு... இவ்வளவு நாளும் கடைசி மகளின் வீட்டிலிருந்த பாட்டி இன்று தனது மூத்த மகளின் வீட்டுக்குத்தான் செல்கிறாள்...
ஏண்டி குமுதா கொஞ்சம் குடிக்க தண்ணீ கொண்டாந்து தாடி. உச்சி வெயில் கொழுத்துது என்று தன் புடவையால் முகத்தையும் கைகளையும் துடைத்தவாறு திண்ணையில் அமர்ந்து தனது பேத்தி குமுதாவிற்கு கட்டளை போட்டாள் ரமணி பாட்டி...
குமுதா: இந்தா பாட்டி தண்ணி...
தண்ணியை குடித்தவாரே எங்கடி அம்மா... நான் போட்ட சத்தத்திற்கு இந்நேரம் எட்டிப் பாத்திருப்பாளே...
அடுத்த தெரு அங்கதம் மாமிட வீட்டுக்கு நேத்து செய்த பலகாரத்த குடுக்க அம்மா போயிருக்கு .... என்றாள் குமுதா.
ஓ.... ஆமா நீ
என்னடி சோந்து போய் இருக்காய்....
அது மாதா மாதம் வாரதுதான்.... என்னால முடியாம படுத்துட்டு இருந்தன்.... நீ சத்தம் போடவும் தான் எழும்பிட்டு வந்தன்.
இப்ப இருக்குற பிள்ளைங்க அத இத திண்ணுபோட்டு உடம்ப போட்டு கெடுத்துக்குதுங்க...
எங்க காலத்துல மாசா மாசம் வந்தாலும் எம்புட்டு வேலய இழுத்து போட்டு செய்வோம். நீங்க என்னனா வந்தா இழுத்து போத்திட்டு தூங்குறீங்க...
போதும் பாட்டி நிறுத்து பழய பாட்டு பாடாம... நானே முடியாம கிடக்கன்...
ஏண்டி இப்பிடி அழுத்துக்குற... எட்டுப் பிள்ளய பெத்து, வளர்த்து இப்பவும் அங்குட்டு இங்குட்டு இந்த வயசுலயும் நடக்கன். இன்னும் கல்யாணம் கட்டல, ஒத்த புள்ள பெத்துக்கல்ல பக்கத்து தெருவுக்கு போய் வாடின்னா கால் கடுக்குது எங்காய்.... எல்லாம் நாம சாப்பிடுற சாப்பாட்டுல தாண்டி இருக்கு...
பழஞ்சோறு, கூல் சாப்பாடெல்லாம் சொர்கம்டி.... அதுகள திண்ணு... நாங்க எல்லாத்தையும் தோட்டத்துலயே போட்டு விளைவிச்சு சாப்பிட்டோம்... இப்ப நீங்க அதெல்லாம் செய்யாம எண்ணச் சாப்பாடுகளயும் பீஸா, பர்கர் என்டு என்னன்னமோ திண்டுக்கிட்டு உடம்ப கெடுத்துக்குறீங்க....
வீட்டுல தோட்டம், தோப்பெல்லாம் வெச்சம், இப்போ என்ன பண்றாங்க... இருக்குற நிலத்துகல கூறு போட்டு கட்டடமா கட்டுறாங்க....ம்....காலமெல்லாம் மாறிப் போச்சிடி.... இப்ப காத்துக்கும் பஞ்சம் மூச்சுக்கும் பஞ்சமா போச்சு...
சொல்லற பேச்ச கேட்டு ஆரோக்கியமானத சாப்பிடுடி....தெம்பா என்ன போல இருக்கலாம்... அனுபவத்துல வச்சி சொல்றன் சொல்ற பாதையில நடடி... என்று சொன்வாறே திண்ணையில் படுக்கையை போட்டாள் பாட்டி... முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாள் பேத்தி....
முகத்தை திருப்பிக்கொண்டுசெல்லும் பேத்தி பாட்டியின் சொல் கேட்டு நடப்பாளா??? என்பது கேள்விக்குறிதான்...
காலமும் மாறிடுச்சு.... சொல்லு, பேச்சு கேட்டுநடக்கும் தலைமுறையும் குறைஞ்சிடிச்சு...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா