அடியே பிதாஜி அறிவு கெட்ட பிதாஜி

போக்குவரத்து இல்லாத சிற்றூர். இரு நகர்புற இளைஞர் இருசக்கர வண்டியில் மெதுவாக வண்டியை மெதுவாக ஓட்டி வருகின்றனர்.

அவர்களுக்கு அருகிலுள்ள வீட்டில் 🏠 இருந்து அவர்கள் ஸகாகாதில் விழுந்தது:
'அடியே பிதாஜி, அறிவு கெட்ட பிதாஜி'. பிதாஜி என்ற இந்திப் சொல்லின்ஸபொருள் தெரிந்த இருவரும்
அந்த வீட்டிற்குச் செல்கின்றனர்.

"வீட்டில் யாருங்க இருக்கறீங்க; கொஞ்சம் வெளில வாங்க"

"யாருங்க கூப்பட்டது? எம் பேரு முருகன். உங்களுக்கு என்ன வேணுங்க‌?"

"உங்க அப்பா இருக்கிறாருங்களா? அவரு உடல் நலத்தோடு இருக்கிறாருங்களா?"

"என் அப்பா இறந்து பத்து வருசம் ஆகுதுங்க".

"அப்ப யாரை "அடியே பிதாஜி அறிவு கெட்ட பிதாஜி"னு கோபமாத் திட்டினீங்க?"

"என் மனைவியைத் தான் திட்டினேன்.

"'பிதாஜி'க்கு என்ன அர்த்தம்னு தெரியுமுங்களா திரு. முருகன்?

"தெரியுமுங்க பட்டணத்து நண்பர்களே. என் மனைவி பெயர் இந்திப் பெயர் (ஸ்வாதி). அந்தப் பேரைச் சரியா உச்சரிக்க முடியல. சுவ்வாதி. சுவ்வு. வாதி -ன்னெல்லாம் என் மனைவியைக் கூப்பிடுவேன். அது அவளுக்கு பிடிக்கல. நான் பிறந்த உடனே என் அம்மா இறந்துட்டாங்க. எனக்கு பத்து வயசு ஆகிறபோது அப்பா ஒரு விபத்தில் இறந்துட்டாரு. அதுக்கப்புறம் என்னை வளர்த்து சுவ்வுக்குத் திருமணம் செய்து வைத்தது என்னோட அத்தை. தாய் தந்தை இல்லாத, தாய் முகத்தைப் பார்க்காத நான் என் மனைவி சுவ்வுவை பிதாஜினு கூப்புடுவேன். பிதாஜின்னா 'அப்பா அவர்கள்/அவர்களே'னு அர்த்தம்.

உங்க பட்டணத்து அறிவாளிகள் தனத்தை எல்லாம் எங்கிட்ட காட்டாதீங்க. எங்கள் சொந்த விசயத்தில் தலையிட நீங்க யாரு. உங்க வழியைப் பார்த்து போறீங்களா அல்லது எங்கள் மக்களை அழைச்சு உங்களை பொத்தி நார் தாரா கிழிச்சு அனுப்பவா? வந்துட்டானுக ஐசக் நியூட்டனும் கலிலியோவும்‌‌.

இதைக் கேட்டதும் இருவரும் வேகமாக வண்டியில் செல்கின்றனர்.

பிதாஜி செல்லம் இங்க வாம்மா. ஒட்டுக் கேட்டு அந்தப் பட்டணத்து முந்திரிக் கொட்டைங்க ஓட்டம் எடுத்துட்டாங்க கண்ணு.

எழுதியவர் : மலர் (4-Jun-22, 10:46 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 39

மேலே