மேனியெழிலை ராகங்களில்

தேடிய தென்றல் திசைமறந்து
அலையில் நீராடுமுன் மேனியோடு
விளையாடுது
மூடிய முகில்திரை திறந்து
கதிரவனும் உன்மேனியை மஞ்சள்
நீராட்டுது
வாடிய மலர்கள் மீண்டும் மலர்ந்து
உன்மேனியில் பூக்களைத்
தூவுது
பாடிடும் தென்றலும் ஆடுமலையும்
மேனியெழிலை ராகங்களில் ஆலாபனை செய்யுது
எழுசீர் ஆ வி