கேள்வியே வாழ்க்கை
பள்ளியில் படிக்கும் போது
ஆசிரியர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு விடை தெரிவில்லையென்றால்
ஒன்று
அடி கிடைக்கும்
இல்லையென்றால்
திட்டு கிடைக்கும்
அல்லது
சில சமயம் இரண்டும்
சேர்ந்தே கிடைக்கும்....!!
ஆசிரியரை அரக்கன்
என்று மனசுக்குள்
சத்தமாக திட்டிய
மகிழ்ச்சி கிடைக்கும்...!!
இதுவே தேர்வுயென்றால்
சாய்ஸ் கேள்வியை தேர்வு செய்து
பதில் அளிக்கலாம்
பதில் தெரியவில்லை
என்றால் மதிப்பெண்
மட்டுமே குறையும்...!!
ஆனால்
வாழ்க்கையென்னும் பள்ளியில்
வாழ்க்கை துணைவி கேட்கும்
எல்லா கேள்விகளுக்கும்
கட்டாயமாக தப்பில்லாமல்
பதில் சொல்ல வேண்டும்
இங்கே சாய்ஸ் எதுவும் கிடையாது
தப்பித்து பிழைப்பதற்கு
வழியும் கிடையாது...!!
இப்போது எனது பள்ளி
ஆசிரியர் என் கண்முன்னே
விஸ்வரூபம் எடுத்து
தெய்வமாக தெரிகின்றார்
ஆசானே அன்று உங்களை
அரக்கன் என்று திட்டினேன்
இன்றோ...
என் நிலைமை
அந்தோ பரிதாபம்...!!
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
என்பதை நன்கு
உணர்ந்து கொண்டேன்...!!
--கோவை சுபா