இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார் தங்கரும முற்றுந் துணை – நாலடியார் 231
நேரிசை வெண்பா
செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கரும முற்றுந் துணை 231
- கூடாநட்பு, நாலடியார்
பொருளுரை:
கரிய மலைகள் பொங்கும் அருவிநீர் ஒழுகப் பெறுகின்ற நீரெல்லையையுடைய சிறந்த நாடனே!
கட்டுக்கோப்புப் பிரிந்த பழங்கூரையை வீட்டிற் சேற்றையே அணையாகக் கொண்டு, ஒழுகும் நீரை இறைத்தும் தம்மேல் ஏற்றும் தமது காரியம் முடியுமளவும் மக்கள் வருந்திக் கிடப்பர்,
அதுபோற் பொறுக்க முடியாத குற்றங்களையுடைய பொருந்தா நண்பரிடம் தம் காரியம் நிறைவேறுமளவு மட்டும் நல்லோர் மிக்க இடர்களோடு தொடர்பு கொண்டிருப்பர்.
கருத்து:
கூடா நட்பினரை அகங் கலந்த நேயத்துக்கு உரியராக்காது விலக்குதல் வேண்டும்.
விளக்கம்: கூரை, கூரை வீடு.கிடப்பரென்னும் குறிப்பு, இடர்ப்பாட்டோடிருத்தல் உணர்த்தும். ‘கறை' நிறம் உணர்த்துதல்,