மரணம்
தரித்த வாழ்வினில் தனத்தை போற்றி
மரிக்கும் மனிதன் மகத்துவம் அடையான்
விரித்த வலையில் வீழாத மனமே
சரிந்த பொழுதும் சீரான நிலையே
கரணம் போட்டு காரணம் சொன்னாலும்
மரணம் உன்னை மாறாது தழுவிடும்
சிரமம் கொண்டு சேர்த்த வளங்கள்
பாரமாய் மண்ணில் பகைமையைக் கொணரும்
பிறப்பினைத் தொடரும் பிறழாத காலமும்
இறப்பினை நோக்கிய இனியதொரு பயணம்
சிறப்பினை அடைவாய் சீரான குணத்துடன்
அறத்துடன் இயங்குவாய் அலைபாயாத மனதுடன்......

