என் உள்ளம்

என் இனியவளே
உன்னை காணும் வரை
"என் உள்ளம்"
என்னிடம் தான் இருந்தது...!!

இப்போது உன்னையே
சுற்றி சுற்றி வருகிறது
நீயோ என்னை ஏற்றுக்கொள்வதற்கு
ஆயிரம் யோசனை செய்கிறாய்...!!

யோசனை
செய்தது போதும்
விரைவில்
நல்ல முடிவை எடுத்து
"என் உள்ளதை"
உன்னோடு இணைத்துக்கொள்..!

இல்லையென்றால்
திரிசங்கு நிலையில்தான்
"என் உள்ளம்" இருக்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jun-22, 6:07 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en ullam
பார்வை : 305

மேலே