உன் மேதமை கண்டு நான் வியக்கிறேன்

மேனிமுழுதும் வெண்பனி தீண்டியது போல உடலில் நடுக்கம் என் பார்வையில் அப்படியொர் குளிரா!


என் வருகையை எதிர்பார்த்து ஏக்க‌த்தை பூசி கொள்வாயே

எனை பார்த்ததும் தலை முடியோடு யுத்தம் செய்வதில் என்ன மர்மம்


அவ்வளவு மனவலிமை இருந்தும் என்னருகில் பெண்மையின் நளினம்

என் மனமகிழ்ச்சி உன் மகிழ்ச்சியானது விடைதெரியா புதிர்தான்


வார்த்தைகள் பேசப்படாமலே என்‌ மனவோட்டம் அறியும் மேதையும் நீதான்


உன் மேதமை கண்டு நான் வியக்கிறேன்.

எழுதியவர் : Kaleeswaran (19-Jun-22, 4:06 pm)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 109

மேலே