கண்ணீருக்கு ஒரு கவிதை
💧💧💧💧💧💧💧💧💧💧💧
*கண்ணீருக்கு*
*ஒரு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💧💧💧💧💧💧💧💧💧💧💧
*கண்ணீர்......*
அழுகை
பெற்றெடுத்தக் குழந்தை.....
விழி மீன்கள்
நீந்தும் குளம்....
யாரை காதலித்து
ஏமாந்ததோ...
கன்னமலையிலிருந்து
குதித்து
தற்கொலை
செய்துக்கொள்கிறதே...?
கடல் நீரைப்போல்
கண்ணீரும்
வற்றிப் போகாததால் தான்
உப்புக் கரிக்கிறது
என்னவோ.....?
கல் மனதையும்
கரைக்கும் ராஜதிரவம்...
ஆனந்ததத்திற்கு வரும்
சோகத்திற்கும் வரும்
நல்ல தோழன்....
மனம்
காயப்படும் போது
கசியும் ரத்தத் துளிகள்.....
இமை புற்களில்
அழுகை நேரத்தில்
படிந்திருக்கும்
பனித்துளிகள்......
கவலை
துயரம்
துன்பம்
வேதனைகளை எடைபோடும் எடைக்கல்...
பெண்கள்
ஆண்களை
எளிதில் வெல்வதற்காக
பயன்படுத்தப்படும்
ஆயுதம்.....
மொழிகளால்
சொல்ல முடியாததைக் கூட
சிறு துளிகளால்
சொல்லி விடும்....
இதை
தொடைத்து
விட்டவர்களுக்கும்....
தொட்டுப் பார்த்தவர்களுக்தான்
தெரியும்
இதன் அருமை.....!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
💧💧💧💧💧💧💧💧💧💧💧