வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்

எப்பா வகையும் நம் விருப்பம்போல் எழுதி விட முடியாது;

வஞ்சி விருத்தம் தமிழ் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகைகளுள் ஒன்று;

இது அளவொத்த சிந்தடிகள் நான்கு கொண்டு அமையும்;

வஞ்சிப்பாவின் பிற இனங்களைப் போலவே இலக்கியங்களில் இது மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது!

எ.காட்டு:

வஞ்சி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம்)

ஆழி யாயிவன் ஆகுவான்,
ஏழை வாழ்வுடை எம்முனோன்
தாழ்வி லாவொரு தம்பியோன்;
ஊழி நாளுமு றங்குவான் 116

(116 ல் இருந்து 126 வரை 11 பாடல்கள் வஞ்சி விருத்தம்)

வஞ்சி விருத்தம்
(மா மா கருவிளம்)

நன்றி தன்று நமக்கெனா,
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முனெய்தினான்'
என்று சொல்லி, இறைஞ்சினான் 126

- கும்பகருணன் வதைப் படலம், யுத்தகாண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-22, 5:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே