இளநங்கை போலதனின் இன்சுவை - வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்
(புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்)

அளவொத்த சிந்தடிகள் நான்கமைதல்
உளந்தன்னில் கண்டுவிட்டால் உண்மையென்பேன்!
இளநங்கை போலதனின் இன்சுவையும்
இளநெஞ்சில் காண்பதுவும் இன்பமன்றோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-22, 7:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே