சுட சுட மீன் வறுவல் இங்கு கிடைக்கும்
சுட சுட மீன் வறுவல் இங்கு கிடைக்கும்
ஓடும் நீரில்
வெள்ளி காசுகளாய்
சூரிய வெளிச்சத்தில்
மின்னி மறைந்து
செல்கின்றன மீன்கள்
கூட்டம்
அதனை அள்ளி
செல்ல
வலையை வீசி
காத்திருக்கும்
மீனவர்கள்
“சுட சுட மீன் வறுவல்”
இங்கு கிடைக்கும்
தப்பும் தவறுமாய்
எழுத்து பிழைகளுடன்
சுவரொட்டி
அருகருகே வரிசையாய்
அடுப்புகள் எரிய
அடுப்பின் மேல்
வாணலியில்
கொதிக்கும்
எண்ணெயில்
இரத்த சிவப்பாய்
பூசி மெழுகிய
மீன்களை
அள்ளி போட்டு
எடுத்து கொடுத்து
கொண்டிருக்கும்
பெண்கள்
சப்பு கொட்டி
புசித்து கொண்டும்
எதிர்பார்த்தும்
இலையுடன்
காத்து நிற்கிறது
மக்கள் கூட்டம்