காதல் மழை

வானக் காதலனின்
பிரிவுத்தனிமையில்
நொந்து நொந்து
வெந்துபோன நிலமகளுக்கு
மேகத்தூதுவனின் மழைக்கடிதம்
சற்றே ஆறுதலித்தது ..

வெம்மை தணிந்து
அவள் தேகம்
குளிர்ந்தது.,

அவள் மேனி யெங்கும்
கடிதத்தின்
எழுத்துக்கள்
முத்து முத்தாய்
தெறித்து நிற்க
சந்தோச வெள்ளத்தில்
துள்ளிக் குதித்தாள்.,

இது ,
கோடைமழை இல்லை
நிலமகளின் கோபம் தீர்க்க வந்த
காதல் மழை.,

காதல் மழையில்
சொட்ட சொட்ட நனைந்து போனாள்.,

அவள்
கன்னக்குழியெல்லாம்
காதல்மழையின் சின்னம்.,

வழியெங்கும்
காதல் தடங்களாய்
மழை நீர்...

என் மனமெங்கும்
மகிழ்ச்சித்தடங்களாய்
கண்ணீர்...

இன்னும் இரண்டொரு நாட்கள்
கடிதத்தின் ஈரம் காயும் வரை
அவள் காதல் சிலிர்ப்பில்
காலம் களிப்பாள்

நாட்கள் நகர்ந்ததும்.,
மீண்டும்
ஒரு காதல் மழைக்கான
காத்திருப்பில்....


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (30-Jun-22, 8:35 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : kaadhal mazhai
பார்வை : 58

மேலே