கோலம்

"கேட்க பேச்சுக்கள்
இல்லாமல்
காதுகள் ஏங்கும் ,

பார்க்க காட்சிகள்
இல்லாமல்
கண்கள் தூங்கும்,

பேச விஷயங்கள்
இல்லாமல்
உதடுகள் காயும்,

அணைக்க உறவுகள்
இல்லாமல்
கைகள் ஓயும்,

நடக்க பயணங்கள்
இல்லாமல்
கால்கள் தேயும்,

இது தான்
பெரும்பாலும்
முதுமையின்
கோலம்."👵🧓

எழுதியவர் : (2-Jul-22, 7:11 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kolam
பார்வை : 29

மேலே