மாதா பிதா குரு தெய்வம்

மாதா பிதா குரு தெய்வம் என்பது பழமொழி
பெற்றோர் சரியாக அமைந்தால்
நல்ல பிள்ளைகள்
கிடைப்பார்கள்..
ஒரு ஆசிரியர் சரியாக அமைந்து விட்டால்
நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்
சிலநேரங்களில் தெய்வங்களும் மண்ணில்
தென்படுவார்கள்..

எழுத்தறிவிப்பனை இறைவனாகப் பார்த்தது
அந்தக் காலம்.,
ஏளனமாக பார்ப்பது இந்தக்காலம்

இரண்டு மூன்று
பட்டங்கள் வாங்கியும் வேலையில்லை....
போட்டித்தேர்வுகளும்
தகுதித் தேர்வுகளும்
வெறும்
தேர்வுகளாக மட்டும்.,
யாரையும் தேர்வு செய்வதாக இல்லை..

அரசியல்வாதிகள்
பொய்வேசம் போடுகிறார்கள்...
பாடம் சொல்லப்
படித்தவனுக்கு
தினம் ஒரு பாடம் சொல்லித் தருகிறார்கள்..

போராடினால் தான் முடிவினை
எட்டிட முடியும்
என்ற முடிவில்
வெறுமையில்
தற்கொலை செய்து கொண்ட
மனங்களை
மறைத்துக் கொண்டு
வெற்று உடல்களாய்
போராடிக் கொண்டிருக்கும்
எங்கள்
சக உதிரங்கள்
வரலாற்றில் இடம் பிடிக்கட்டும் ...
சோதனைகளை சாதனையாகட்டும்...

இளைய சமுதாயத்தின் வேர்களில் சிகிச்சை
செய்ய வந்தவர்களை வீதிகளில் நிறுத்தியது
யாரது குற்றம்?

நாளைய தூண்களை செதுக்க போகிறவர்களை
நாளும் சிதைப்பது எந்த விதத்தில் நியாயம்

தேர்வுகள்
வைக்கப் பிறந்தவர்களை
தேர்வுகள் வைத்தே சாகடிக்காதீர்கள்...

படித்தவனின் வறுமை
நாட்டின் வறுமை
என்பதை
நினைவில் கொள்ளுங்கள்

பணி ஆணை வழங்கி
அவர்கள் இளைப்பாறவும்
கொஞ்சம்இடம் கொடுங்கள்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (2-Jul-22, 3:21 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 166

மேலே