என் மன்னவனின் காதல்

ரோஜாவில் இருக்கும் முட்கள் ரோஜாவிற்கு பாரமில்லை...
அது ரோஜாப்பூவை காக்கும் அரண் ..
எவரும் அதை தீண்டாமல் இருக்க அரணாக உள்ளது
அதுபோல் தான் நீயும்..
என்னையும் காக்கும் அரணாக இருக்கிறாய்
ரோஜாவின் முள் போல் பார்ப்பதற்கு
கரடு முரடாய் இருப்பாய்...
ஆனால், எனக்கு மட்டும் தான் தெரியும் அது என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ..
காதல் என்ற ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியும் ....
ரோஜாவின் வாசத்தை விட உன் காதலின் வாசமே பெரியது என்னை பொருத்த வரை ....

எழுதியவர் : பிரியா (5-Jul-22, 2:05 pm)
பார்வை : 128

மேலே