உள்ளத்தை திருடிச் செல்வாள் காதலி

உள்ளத்தை திருடிச் செல்வாள் காதலி
கள்ளப் பார்வையில் களவியல் கற்பிப்பாள்
வெள்ளைச் சிரிப்பால் வரவேற்பு நல்குவாள்
அள்ளித் தருவாள் காதலை அந்திப்பொழுதில்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-22, 9:15 pm)
பார்வை : 64

மேலே