ஆனந்த குற்றாலம்


குற்றாலம் பார்த்தேன்
என்பது அல்ல
குற்றாலத்தில் குளித்தேன்
என்பதே சரி

கோவிலைப் பார்த்தேன்
என்பது அல்ல
கோவிலில் இறைவனை
வணங்கினேன் என்பதே சரி

அருவியில் நனைவது
இனிய அனுபவம்
ஆண்டவன் அருளில் நனைவது
தெய்வீக அனுபவம்

குற்றால அருவியில் நீராடி
குழல்வைமொழியினளுடன்
அழகிய அருவிக் கரையில் அமர்
கவின் சாரலன் குற்றால நாதனை
அவன் ஆலயத்தில் வணங்குதல்
ஆன்மா களித்திடும் ஆனந்த குற்றாலம்

----கவின் சாரலன்


எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-11, 7:28 am)
பார்வை : 219

மேலே