நீதி
அன்பின் வழிநடத்தல் நீதியன்றோ,
அறத்தின் வழிநின்றல் நீதியன்றோ
பண்பில் சிறந்திருத்தல் நீதியன்றோ,
நெஞ்சம் நிறைந்திருத்தல் நீதியன்றோ,
நெறிகள் பிறழாதிருத்தல் நீதியன்றோ,
பழிக்கு ஆளாகாதிருத்தல் நீதியன்றோ,
ஆனால், செய்த குற்றத்திற்கு
வழங்கப்பட்ட தண்டனையே,
இங்கு நீதியாக போற்றப்படுகிறது...