உன் நினைவுகள் என் மனதை

பூங்கனவு விரிந்திடும் இரவுப்பொ ழுதுதன்னிலே
உன்நினைவு களுமெனது மனதினை வருடுது
வான்நிலவும் எனதிமைக ளைத்தழுவிச் செல்லுது
பூங்காற்றும் காதல்கீ தம்பாடுது !

பூங்கனவு விரிந்திடும் இரவுப்பொ ழுதுதன்னிலே
நீங்கா உன்நினைவு என்மனதை வருடுது
தூங்கா நிலவும் இமைகளைத் தழுவுது
பூங்காற்றும் காதில் காதல்கீ தம்பாடுது !

சில யாப்புக் குறிப்புகள் :--
மேலே பா கீழே பாவினம்
பா --வெண்கலிப்பா ----வெண்பா போல் ஈற்றடி மூன்று சீரால் அமைந்திருப்பது காண்க
பாவினம் : கலிவிருத்தம் . பாவினத்திற்கு தளைவிதிகள் இல்லை
யாப்பார்வலர்கள் சரியான யாப்பாசிரியர்களிடம் மேலும் தெரிந்து கொள்ளவும்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-22, 6:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 226

மேலே