தட்டைப்பயறு- வெண்பயறு - கரும்பயறு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தட்டைப் பயறுமந்தஞ் சந்நிதரும் வெண்பயறு
முட்டியே மெய்யில் முதிர்வாதக் - கட்டறுக்கும்
காணாய் கரும்பயறு கம்முநீர் வாதமுடன்
கோணுவா தத்தையும்போக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

தட்டைப்பயிறு மந்தம், சன்னி இவற்றைத் தரும்; வெண்பயிறு வாதத்தைப் போக்கும்;. கரும்பயிறு சிலேட்டும வாதத்தையும் பக்க வாதத்தையும் நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-22, 7:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே