பச்சைப்பயறு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பச்சைப் பயறதுதான் பாரிற் பயித்தியத்தை
அச்சமற நாளும் அகற்றுங்காண் - கச்சுலவு
கொங்கைமட மாதே குளிர்ச்சியென்பார் எப்போதுந்
தங்குவா தத்தைத் தரும்
- பதார்த்த குண சிந்தாமணி
குளிர்ச்சியுடைய பச்சைப் பயிறு பித்தம் போக்கும்; வாயுவைத் தரும் .