யோகமடி

முடியும் வாழ்க்கை பாதையிலே
நெடும் பயணம் போகையிலே
உன்னை நாளும் மனம் நாடுதடி
உன் உறவை மட்டும் தினம் தேடுதடி

என் அருகினில் நீ இருக்கையிலே
உன் மடியினில் நான் கிடக்கையிலே
எல்லாமே கூடிவந்து சேருதடி
என்வாழ்வில் சுகம்கூடி போகுதடி

மோகம் முப்பதுநாள்
ஆசை அறுபதுநாள்
பழமொழி நானும் அறிவேன் - உன்னாலது
பழங்கதை ஆனதடி

மோகமும் குறையவில்லை
ஆசையும் அழியவில்லை
அத்தனையும் நீவந்த நேரமடி - என்வாழ்வில்
நான் அனுபவிக்கும் யோகமடி

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Jul-22, 12:21 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 112

மேலே