சித்தந் தனில்வை சிவம் - நேரிசை வெண்பா
சித்தந் தனில்வை சிவம்!
நேரிசை வெண்பா
எத்தனையோ துன்பம் இடர்ப்படவே வந்தாலும்
அத்தனையும் வெல்வதற்(கு) ஆன்றநற் - சித்தனை
முத்துப்போல் காத்திடும் மூத்தவனை எந்நாளும்
சித்தந் தனில்,வை சிவம்!
- வ.க.கன்னியப்பன்