உருகினேன் உயிரே
ஏங்கினேன் என்னுயிரே! விரைவாய் வருவாயென
ஏமாற்றினாய் நீ ...
வேண்டினேன் தங்கமே! தாமதமாய்ச் செல்ல
தவிக்கவிட்டாய் நீ...
உருகினேன் உயிரே! திரும்பி வாவென
உணரவில்லை நீ...
கலங்கினேன் கண்ணே! இமைக்காமல் உனக்காய்
காணவில்லை நீ ...
சுவாசிக்கிறேன் வாசமே ! யாருக்கும் காத்திராத
காலம் நீ...