துணிவே துணை

நாயை பார்த்தவுடன்
நீ ஓட ஆரம்பித்தால்
நீ ஓட ஓட நாய்
உன்னை மேலும் துரத்தும்..!!

துரத்தும் நாயை
நீ திரும்பிப் பார்
அது உன்னை கண்டு
ஓட ஆரம்பிக்கும்...!!

வாழ்க்கையும்
அதுபோல் தான்
துன்பங்களை கண்டு
நீ கவலை கொண்டு
இருக்கும் வரை
உன்னை விட்டு விலாகாது...!!

எதிர்த்து நின்று
போராட ஆரம்பித்தால்
துன்பங்கள்
துண்டை காணும்
துணியை காணும் என்று
நம்மை விட்டு
ஓட ஆரம்பிக்கும்...!!

துணிவே துணை என்று
துணிந்து நின்றால்
உன் வாழ்க்கை
உன் விருப்பம் போல்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jul-22, 6:28 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thunive thunai
பார்வை : 162

மேலே