வாழ்க்கை தத்துவம்
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*என் மொழி*
படைப்பு *கவிதை ரசிகன்*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
நாம் செய்யும்
பாவம்
புண்ணியத்திற்கான தண்டனை...
இறந்தபின்
கிடைக்கிறதோ இல்லையோ ஆனால்
இருக்கும் போது
நிச்சயம்
கிடைத்துவிடுகிறது
அதற்கு சாட்சி தான்
வாழ்க்கையில் வரும்
இன்பங்களும்
துன்பங்களும்.....!!!
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
ஒரு முறை
முயற்சி செய்தால்
அலட்சியம் செய்பவர்கள்.... ஒவ்வொருமுறையும்
முயற்சி செய்து பார்
அட !அலட்சியம் என்பார்....!
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
சும்மா இருந்து
துருப்படித்து
அழிவதை விட....
உழைத்துத்
தேய்ந்து அழிவது
எவ்வளவோ மேல்...!
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
தேவைகள்
பூர்த்தி அடையவில்லை என்று வருத்தப்படாதே
அதில்தான் வாழ்க்கையின்
சுவாரசியம் அடங்கியிருக்கிறது... தேவைகள்
முழுவதும்
பூர்த்தி அடைந்து விட்டால்
பணம் கூட
பயனற்றதாகி விடும்....!!!
*கவிதை ரசிகன்*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐