தாயின் கருணை
நான் செய்த புண்ணியம்
நேரிசை ஆசிரியப்பா
(ஒழுகிசை அகவல் ஓசை உடையது)
கருவில் உருவாய் செய்த தாயும்
தருவாய் கற்றது எதுவும் இல்லை
அவளும் நேற்று கற்றது எதுவாம்
காதல் காதல் காதலைத் தவிர
வேறு எதைத்தான் கற்றாள் அவளது
மகளும் பிஞ்சில் காதல்
என்று பள்ளியில் நடத்துது இன்றே
அகவலில் முடிந்த வஞ்சிப்பா
ஆத்தாளவள் மார்பினிலுண்டு
சீம்பாலதனின் சுவைருசித்து
தீந்தமிழ்தாலாட் டில்தூங்கிட
பூத்தமலரை பொத்திவளர்தாள்
அவளதுமடி விட்டிறங்கிலேன்
தவமாயிருந் தேப்பெற்றாளாம்
அன்றவள்
அவளது திருவுரு தினந்தொழ
விளங்கிடும் வாழ்வதும் பெரிதே