என்நெஞ்சத் தேரினைத் தந்தேன் உனக்கு

ஏரிக் கரையினில் முல்லைக் கொடியாய்நீ
வாரி வழங்கவந் தாய்புன் னகைமுத்தை
பாரிமன்ன னைப்போல காதலில் என்நெஞ்சத்
தேரினைத் தந்தேன் உனக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jul-22, 6:36 pm)
பார்வை : 75

மேலே