எதிர் வீட்டு சாளரம்

ஆதவன் உதிப்பதை நீ வரும்வரை
நான் கண்டதில்லை...!

இப்பொழுதோ ஆதவன் என்னனுமதி
இன்றி உதிப்பதில்லை...!

மாமரத்துக் குயில்பாடும் மனதிற்க்
கினிய பாடலையோ...!

விடியற்க் காலை கோவில்
மணி யோசையோ...!

யெனை ஈர்த்த தில்லை
இன்று வரை...!

மனதை மதிமயங்க வைக்கிறது
இப்புது அனுபவம்...!

அலாரம் வைத்து விடியற்க்
காலை யிலெழு வேனென்று
கனவிலும் நினைத்ததில்லை...!

என் இதயம் சூறையாடிய
கள்ளி நீ...!

யென்வாழ்வையும் இனிய கனவாக
மாற்றி விட்டாய்...!

சிகையில் நீர்ச்சொட்ட சொட்ட
செஞ்சாந்து பொட்டிட்டு,

கால் கொலுசு சினுங்க
வாசல் தெளிக்கநீ...

வரும்வேளையில் யென்நிதயத்
துடிப்போ அதிவேகமாக...!

உன் பார்வையில் படாமல்
மறைந்து மெல்ல...

தலையை நீட்டி ஒற்றைக்
கண் பார்வையால்...

நீகோலமிடு மழகை காண்கையில்
பிறவிப்பயனை அடைந்தேன்...!

கள்ளிநீ, தூணுக்குப்பின் மறைந்து
இருக்குமெனைக் கண்டும்...

காணாதது போல்தலை தாழ்த்திகர்ம
சிறத்தையாக கோலமிடுவியே...

அந்நிமிட முன்மீதான யென்னன்பு
ஊற்றாக பெருக்கெடுக்கும்...!

"யென் தாய், தந்தையிடம்
கூறக் கேட்டேன்"

"ஏங்க ஜோசியர் சொன்னது
சரியாப்போச்சு பாத்திங்களா
தைப்பொறந்தா எல்லாம் சரியாகிடும்
என்று சொன்னாருல்ல!!!"

அவர்களுக்கு எங்கே தெரியும்
தைபிறந்த போதுதான்...

நீயுமென் இதயத்தில் புதிதாக
பிறப்பெடுத்தாய் யென்பது...

நீ கோலமிடும் அழகை
மறைந்திருந்து ரசிப்பதுவும்...

நீவேலை பார்க்குமழகை சாளரம்
வழியாக காண்பதுவும்...

கண்ணால் கண்டவுனை மனதில்
பொத்திப் பாதுகாப்பதுவும்...

அளவிலா இன்பத்தை யள்ளித்
தருவது உண்மைதான்...

விண்ணுக்கும் மண்ணுக்கு மிடையிலான
இடைவெளியை இட்டு நிரப்பினாலும்

தீராது, உன்மேல் எனக்குள்ள
காதலின் அளவு...

ஆயினுமென் பொருமை பறிபோகிறது,
உன்னை மறைந்திருந்து

காண்பது மட்டுமினி போதாது
கண்ணே...

என்வாழ்வின் ஒவ்வொரு நொடிப்
பொழுதும் உனை...

என்னவளாக அருகிலிருத்தி ரசிக்க
மனம் துடிப்பது...

நான் மட்டுமே அறிந்த
ரகசியம் அல்லவா.

நீகோல மிடுமழகை அருகிருந்து
காணமனம் ஏங்குகிறது...!

நம்காதலுக்கு புறாவிடு தூதெல்லாம்
கிடையாது என்னவளே...

யெனைஈன்ற பெறுமக்களையே தூதிடுவேன்
உனை ஈன்றவர்களிடம்...

உனை என்னவளாக சிறைபிடிக்க,
காத்திரு கண்மணி
"விரைவில் செய்தி வரும்"

இப்படிக்கு

"எதிர் வீட்டு சாளரம்"

எழுதியவர் : கவி பாரதீ (25-Jul-22, 8:32 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 128

மேலே