இரவில் பிறந்தவர்கள்
அக்காவும் தங்கையும்
இரவில் பிறந்தவர்கள்
இருவருக்கும் பெயர்கள்
பொருத்தமாக வேண்டுமே.
பெயர்கள் வெவ்வேறு
பொருள் ஒன்றாகும்.
அக்கா யாமினி
தங்கை நிஷா.
ஊரெல்லாம் போற்றும்
இனிமையான பெயர்கள்
பொருள் தெரியாததால்
எங்களுக்கும் பெருமை!
இந்திப் பெயர்கள் அல்லவா
இனிமையாகத்தானே இருக்கும்
தமிழ்ப் பெயரைச் சூட்டாத
தமிழர் பெரும்பாலோரில் நாங்களும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Yamini = Night
Nisha = Night