உன்னை கைவிட மாட்டேனடி மானே 555

***உன்னை கைவிட மாட்டேனடி மானே 555 ***


என்னுயிரே...


நீ என்னை நினைக்கிறாயோ
இல்லையோ தெரியவில்லை...

என்னை மறந்து நான் உலகை
ரசிக்க நினைத்தாலும்...

உன்
நினைவே வந்துவிடுகிறது...

விண்ணின்
நட்சத்திரம் எல்லாம்...

உன்னை நினைக்
கும்
போது தோன்றியதுதான்...

உனக்கு நேரம் இருந்தால்
வெளிய வந்து பார்...

நான் உன்னை
எத்தனைமுறை
நினைத்து ரசித்து இருக்கிறேன் என்று...

காதலில்
எதிர்பார்ப்புகள் இருந்தும்...

என்னைவிட என்மீது அதிகமாக
அன்பு வைத்தவள் நீதான்...

மழைத்துளி என்மீது
விழும்
போதெல்லாம்...

நானும் கரைகிறேன் அன்று நீ
எனக்காக சிந்திய நீர் துளிக்காக...

மேடு பள்ளம் பார்க்காமல்
விழும் மழைத்துளி போல...

இன்பம் துன்பம்
எது வந்தாலும்...

உன்னை கை
விட
மாட்டேனடி மானே...

எனக்கான
சொந்தம் நீதானே கண்ணே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (29-Jul-22, 8:45 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 437

மேலே