தாமரையாள்
வெண் தாமரையொத்த பெண்
ஒருத்தி சின்ன இடையதி
விரைவாக அசைந் தாட
வெண்பட்டுப் பூப் பாதங்கள்
காற்றோடு கவி பாட...
புள்ளி மானாக துள்ளி
யோடும ழகைக் கண்ட
நொடிப் பொழுதி லென்
உள்துடிப்பு, செவிப் பறையில்
வந்து மோத...
எனை மறந் (தேன்)
யென்நிலை மறந் (தேன்)
அதி விரைவாக அவளை
பின் தொடரும் தும்பியாக
யென் விழிப் பார்வை
இமைக்காமல்...
சிப்பிகளின் பாதம் பற்றினேன்
முத்துக் களை யாசித்தேன்,
அவள் சங்குக் கழுத்தில்
அணியப் பெற்றால் நித்திலமும்
மோட்சம் பெறுமே...!
சங்குடன் சங்கமிக்க மிகப்
பொருத்த மானது நித்திலம்
அல்லாது வேறு என்ன???