மகிழ்ச்சியின் தேடலில் மர்மம் - அத்தியாயம் 8

நேரம் சரியாக 10 .00 Pm பழைய சுவர் கடிகாரம் அலறுகிறது. டிங் டோங், டிங் டோங்.
ரஹீமா: என்ன பண்றீங்க மணி 10 மணி ஆயிடுச்சு சீக்கிரம் போயிட்டு காலகாலத்துல வாங்க.
சிக்கந்தர்: வரேன் அம்மா. கிளம்பியாச்சு. என்ன பண்ற சீக்கிரம் வா?
நசீமா; நானும் கிளப்பியாச்சு.
சிக்கந்தர்: ஓகே அம்மா நாங்க போயிட்டு வண்தறோம். மாமி மாமா அண்ட் நிஷா போயிட்டு வரோம்
நஸீமா: சரி போயிட்டு வரோம் மாமி. அம்மா அத்தா போயிட்டு வரோம். போயிட்டு வரேன் நிஷா. பாப்பா எந்துருச்சா பால் நான் காய்ச்சி வச்சு இருக்கேன் ஊத்தி கொடு. மாமி அம்மாவா தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணாத.
நிஷா: என்ன என் தலைல வேலைய கட்டுற பாத்தா தெரில நானும் கிளம்பி இருக்கிறது. நானும் உங்க கூட வரேன்.
நசீமா: ஏ எரும நானே பல வருசமா பிளான் பண்ணி இன்னிக்கி தான் எல்லாம் ஒத்து வந்து இருக்கு. ப்ளீஸ் கெடுத்துடாத.
நிஷா: நான் வரதுனால என்ன பிரச்சனை உனக்கு. மச்சான் நான் வரதுனால உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?
சிக்கந்தர்: எம்மா தாயே இது உங்க போட்ட பிளான் நான் ஒன்னும் சொல்ல முடியாது. நீ அவ கிட்ட பேசிக்கோ.
நஸீமா: நாங்க புருஷன் பொண்டாட்டி தனியா போறதுக்கு ஆசைப்படுறோம் நீ எதுக்கு நடுவில. உனக்கு கல்யாணம் நடக்கும் அப்போ உன்னோட புருசனோட போ இப்போ எங்களை விடு தனியா.
நிஷா: எனக்கு வர புருஷன் நம்ம மச்சான் மாதிரி இருந்த பரவா இல்லை வேற மாதிரி வந்த என்னோட ஆசை எப்படி நிறைவேத்துறது.
நசீமா; அம்மா பாருங்க வேணுமினே பிரச்சனை பண்ணுற.
மாமி; என்ன உன் பிரச்சனை நிஷா. கிளம்புற நேரத்துல இப்படி பண்ணிகிட்டு இருக்க.
நிஷா: ரஹீமா மாமி நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுங்க ப்ளீஸ்.
ரஹீமா: நான் என்ன சொல்லாம. அவ ஆசைப்படுறா விடு. நசீமா சொன்ன மாதிரி உன் வீட்டுக்காரன் கூட்டிட்டு போக சொல்லுவோம்.
நிஷா : அதுக்கு என்ன கேரண்ட்டி?
மாமா: அம்மா விடுமா போயிட்டு வரட்டும் நேரமாகுது.
மாமி: கேரன்டியா? அதெல்லாம் கொடுக்க முடியாது. அது உன்னோட பாடு உன்னோட வீடுகரோட பாடு.
நிஷா: அது சரி அதான் சொன்னேன்ல மச்சான் மாதிரி இருந்தா ஒதுக்க வச்சுக்கலாம். அப்படி இல்லாட்டி என்ன பண்ண.
ரஹீமா: நான் தப்பு பண்ணிட்டேன் .
மாமி; என்ன மச்சி எதுக்கு இப்படி சொல்றிங்க.
ரஹீமா: இவளோ வருத்தப்படுறாளே என் மருமகள் நிஷா நான் மூணு பசங்களோட நிறுத்திட்டேன் இன்னொரு பையனை பெத்து இருந்த அவனுக்கு இவளை கட்டி வச்சுய் ஜோடியா போயிட்டு வாங்கனு விட்ருக்கலாம்.

ஹா ஹ் ஆஹா ஹ் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு
நிஷா: கரெக்ட் மாமி.
நசீமா: ப்ளீஸ் நாங்க போயிட்டு வரோம் ப்ளீஸ் ப்ளீஸ் நம்ம இன்னொரு நாளைக்கு போலாம்.
நிஷா: சரி சரி அக்காவா போய்ட்டா சரி போயிட்டு வா ஆனா ஒரு கண்டிஷன்.
நசீமா; கண்டிஷன் என்ன?
நிஷா: உன்னோடு புது கிறீன் கலர் சுடிதார் இருக்குல்ல அத நான் நாளைக்கு என் friends வீட்டுக்கு போட்டு போறேன்.
நசீமா: நீயே வச்சுக்கோ அத இப்போ எங்களை விடு.
மாமி: அடிப்பாவி இந்த சுடிதாருக்கு தான் நீ இந்த பிளான் போட்டியா.
நிஷா: அப்பறம் சும்மா கேட்ட இந்த மேடம் குடுப்பாங்களா. இது எப்படி இருக்கு?
சிக்கந்தர்: சூப்பர்!
நசீமா: என்ன சூப்பர். அன்னிக்கி கேட்டு குடுக்கலைனு சரியா நேரம் பாத்து கேக்குது பாரு எருமை. சரி சரி நீயே வச்சுக்கோ.
நிஷா; நீஙக இப்போ போகலாம் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.
ரஹீமா: என்னமா பிளான் போடுறா. நல்ல வேலை எனக்கு இன்னொரு பையன் இல்லை.
ஹா ஹ் ஹ் எ எ ஆஹாஹா
மாமா: சரி மாப்ள கிளம்புங்க.

நசீமா அண்ட் சிக்கந்தர் காரில் வந்து அமரும் போது சரியாக மணி 10 . 30 பின்.

சிக்கந்தர்: சரியான வாலு உன் தங்கச்சி.
நசீமா: ஆமா அந்த லூசு சின்னதுல இருந்ததே அப்படி தான்.
சிக்கந்தர்: விடு பாப்பா. பாவம்.
நசீமா: அதனா பாத்தேன் என்னடா இன்னும் போங்கலேயே அப்படினு. கொளுத்தியவ சொன்ன உடனே பாத்துகிட்டு வந்துருவாரு. நீங்க மட்டும் அவ வரேன் சொன்னதுக்கு ஓகே அப்படினு சொல்லியிருக்கணும் அங்கேயே ஒன்னு மூக்குல குத்தி இருப்பேன் .
சிக்கந்தர்: (மனசுக்குள்) தெரிஞ்சு தான பேசாம இருந்தேன்.
நசீமா: என்ன பதிலே காணோம்.
சிக்கந்தர்: ஒன்னும் இல்ல பாப்பா உன்னோட தங்கச்சி அப்படிங்குறது நாலா தான் அவ்வளவு அக்கறை.
நசீமா: யோ போலீஸ் சும்மா நடிக்காதா. நான் உன்னோட lie deductor மாதிரி என்னட்ட உன் பருப்பு வேகாது.
சிக்கந்தர்: சரி சரி போலாமா?
நசீமா: அந்த பயம் கிளம்புங்க.
சிக்கந்தர்: சரி பாப்பா நம்ம போற வழில ஸ்டேஷன் போயிட்டு போலாம்.
நசீமா: எருமை எதுக்கு. நான் வரல நீ போயிட்டு வந்து என்ன கூட்டிட்டு போ. என்னால அன்னிக்கு மாதிரி எல்லாம் வெயிட் பண்ண முடியாது.
சிக்கந்தர்: என்னிக்கு வெயிட் பண்ண?
நஸீமா: தெரியாத மாதிரி நடிக்காத. இப்படி தான் ஷாப்பிங் போகும் போது இப்படி தான் சொன்ன பாப்பா நான் உன்ன மால்ல ட்ரோப் பன்றேன் நீ பர்ச்சஸ் பண்ணிட்டு இரு நான் இந்த கேஸ் கட்ட ஸ்டேஷன்ல குடுத்துட்டு ஐந்து நிமிஷத்துல வரேன் அப்படினு சொன்ன எப்போ வந்த நியாபகம் இருக்க?
சிக்கந்தர்: அதுவா ஏய் அது போனப்போ ஒரு eve டீசிங் கேஸ் அந்த பொண்ணோட துப்பட்டா எடுக்குறேன்னு பைக்ல போகும் போது இழுத்து இருக்கான் அந்த பொருக்கி. பாவம் அதனால அந்த பொண்ணு கீழ விழுந்து முகம் fulla காயம் எனக்கு ரொம்ப கோவம் வந்து அவனை நாலு காட்டு காட்டிட்டு இருந்தேன் அதுல உன் கூட வந்ததே மறந்துட்டேன்.
நசீமா: அது சரி பாவம் அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ண ரொம்ப சந்தோசம் ஆனா இந்த பொண்ணை மறந்துட்ட? அதுல கூட நியாயம் வேண்டாமா ஒரு மணி நேரம் இல்ல ரெண்டு மணி நேரம் மறக்கலாம் ஒரு நாள் full வா மறந்து தொலைவ.
சிக்கந்தர்: ஏய் நான் கால் பண்ணேன் உனக்கு.
நசீமா: கிழிச்ச காலைல 10 மணிக்கு விட்டுட்டு சாயந்தரம் 6 .௦௦ மணிக்கு பண்ணுற. அதுல பாப்பா எங்க இருக்க நான் வந்திறேன் இன்னும் ஒரு 30 நிமிசத்துல அப்பகூட உடனே வரேன் சொல்லல சைக்கோ. போலீஸ் சைக்கோ நீ. நல்ல வேலை என்கிட்ட பணம் இருந்துச்சு அதனால purchase பண்ணிட்டு கிளம்பிட்டேன். செம்ம கோவம் உன் மேல ஆனா அந்த பெண்ணுக்காக நீ கஷ்ட்டப்பட்டனால பொழைச்ச.
சிக்கந்தர்: சரி சரி விடு அப்போ technical fault ஆயிடுச்சு. எப்பையுமேவா.
நசீமா: இப்போ எதுக்கு போற?
சிக்கந்தர்: லூசு நம்ம அவுட் ஆப் ஸ்டேஷன் போறோம் GUN handover பண்ண வேண்டாமா?
நசீமா: அப்போ நானும் உன்கூடவே வரேன் கார்ல வெயிட் பண்ண மாட்டான் மறந்தாலும் மறந்திடுவா.
சிக்கந்தர்: வேண்டாம் அப்படினு சொன்ன கேக்கவா போற. வா போலாம்.

அடுத்த 20 நிமிடத்தில் ஸ்டேஷன் வந்துவிடுகிறது.

பெருமாள்: அய்யா வாங்க நஸீமா வாம்மா. இன்ஸ்பெக்டர் ஆயிட்டீங்கனு கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோசம் . எல்லாம் நஸீமா இனாயா வந்த நேரம்.
சிக்கந்தர்: வேலை நான் பாப்பேன் கிரெடிட் அவங்களுக்கு. என்ன நியாயம்?
பெருமாள்: உங்களை இப்படி வேலை செய்ய motivate பன்னுறதே அவங்க தானே.
நஸீமா: கரெக்ட்டசொன்னிங்க அப்பா.
சிக்கந்தர்: ம்ம்ம் சரி சரி ரொம்ப பண்ணாதீங்க .
பெருமாள்: அய்யா இங்க ஸ்டேஷன்ல எல்லாம் உங்களுக்கு செம்ம வரவேற்பு குடுக்கலாம்னு நினைச்சோம் திடிர்னு இப்போ வந்துட்டீங்க. ஜனவரி 02 தான் வருவீங்க அபப்டினு சொன்னிங்க..
சிக்கந்தர்: ஏட்டய்யா உங்களுக்கு தெரியாத அவுட் ஸ்டேஷன் போறப்போ GUN HANDOVER பண்ணனும்னு.
பெருமாள்: ஓ மறந்துட்டேன்.
சிக்கந்தர்: கார்ல போய் ஏறு வேலை முடுஞ்சு.
நஸீமா: சரி ஓகே. அப்பா கிளம்புறேன்.
பெருமாள்: சரிங்க அம்மா.
சிக்கந்தர்: GUN லாக்கர்ல வச்சாச்சு. form fill பண்ணிட்டேன். COPY SP அனுப்பிட்டேன்.
பெருமாள்: சரிங்க அய்யா நல்லபாடிய போயிட்டு வாங்க. சிறுமலை தானே .
சிக்கந்தர்: ஆமா ஏட்டைய்யா. போயிட்டு வரேன்.
பெருமாள்: அய்யா ஜாக்கிரதை சிறுத்தை நடமாட்டம், காட்டு யானை, காட்டு எருமை மற்றும் கழுத்தை புலி அதிகமா இருக்கும்.
சிக்கந்தர்: சரி சரி பாத்துக்கிறேன். ஸ்டேஷன் பாத்துக்கோங்க.

மணி நேரம் 11 .00 மணி.

சிக்கந்தர்: பாப்பா போலாமா?
நசீமா: போலாம் இப்போவே டைம் ஆயிடுச்சு.
சிக்கந்தர்: ஏய் இன்னும் ஒன்னு hour இருக்கு அதுக்குள்ள நம்ம சிறுமலை உச்சிக்கு போய்டலாம். எனக்கு தெரியாத பாப்பா.
நசீமா: ம்ம் போய்ட்டா சந்தோசம்.

கார் கிளம்பியது.............

தொடரும்........

எழுதியவர் : (4-Aug-22, 6:42 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 48

மேலே