என் மீதான உன் அன்பு தீர்ந்துவிட்டதோ 555

***என் மீதான உன் அன்பு தீர்ந்துவிட்டதோ 555 ***


மின்னலே...


தென்றல் சில நேரம்
சூறாவளி சில நேரம்...

மாறி மாறி வீசி கொண்டு
இருந்த என் வாழ்வில்...

காதல் என்னும்
மழையாக வந்தாய்...

மேக மோதலில் மின்னி
மறையும் மின்னலை போல...

இன்
று என்னைவிட்டு
பிரிந்துவிட்டாய்...

மேகத்தில் ஒளிந்திருக்கும்
மழைத்துளி போல...

நீ என்னுடன் என்றும் இருப்பாய்
என்று நம்பினேன்...

நீ பிரிவது
முன்பே தெரிந்திருந்தால்...

நேசிக்க
யோசித்திருப்பேன் கொஞ்சம்...

இமைக்கும் விழிகளின்
முன்னே நீ வராததால்...

நான் உன்னை மறப்பேன்
என்று நினைத்தாயோ...

விழிகளின்
பார்வைக்குத்தானே விருந்தில்லை...

உன் நினைவுகள் பதிந்த
என் இதயத்தில் என்றும் விருந்துதான்...

ஆயிரம் கனவுகள்
எனக்கு
தந்துவிட்டு...

நீ பிரிந்து சென்ற
மாயம்தான் என்னவோ...

என்மீதான உன்
அன்பு தீர்ந்துவிட்டதோ...

கன்னத்தின் வழியே
வடிந்து செல்லும்...

என் கண்ணீர் மட்டும்
இன்
னும் தீரவில்லை எனக்கு.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (5-Aug-22, 8:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 273

மேலே