உன் நினைவுகள் மட்டுமே துணையாக 555

***உன் நினைவுகள் மட்டுமே துணையாக 555 ***


என்னுயிரே...


பௌர்ணமியில் உன்
நினைவுகளுடன் நடை போட்டால்...

துணையாக நான்
செல்லும் இடமெல்லாம்..
.

நிலவும்
நிழலும் தொடர்கிறது...

இறுதிவரை என்னுடனே வருமென்று
நினைத்தேன் உன்னை போலவே...

அமாவாசை இரவில்
நிலவும் நிழலும் வரவில்லை...

உன் நினைவுகள் மட்டு
மே
துணையாக வருகிறது...

நீ இல்லாத என் வாழ்வு
ஒற்றை சிறகுள்ள பறவைபோல...

நடந்து

செல்லவும் முடியவில்லை...

பறந்து
செல்லவும் வழியுமில்லை...

எனக்கான சின்ன சின்ன
ஆசைகள் எல்லாம் மறந்து போனது...

உன் ஆசைக்காகவும்
உனக்காகவும் வாழ ஆசைகொண்டேன்...

உன்
ஆசைகளே பெரிதென...

என்னை மறக்கவும்
செய்துவிட்
டாய்...

சில நாட்களோ
பல நாட்களோ...

உன்னுடன் நான்
இருந்த நினைவுகள்...

மண்ணில் நான்
மறைந்தாலும் மறையாதவை.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (9-Aug-22, 4:51 pm)
பார்வை : 942

மேலே